Jul 24, 2026
Thisaigal NewsYouTube
நீர் விநியோகம்: புதிய சுத்திகரிப்பு நிலையம்!
தற்போதைய செய்திகள்

நீர் விநியோகம்: புதிய சுத்திகரிப்பு நிலையம்!

Share:

பினாங்கு மாநிலத்தின் செபராங் பிரை செலாத்தான் பகுதியில் நீர் விநியோகத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், சுங்கை கிரியான் பகுதியில் 216 மில்லியன் ரிங்கிட் செலவில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளதாக பினாங்கு முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இப்பகுதியில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ள நிலையில், 80 மில்லியன் லிட்டர் நீர் கொள்ளளவு கொண்ட இந்த புதிய நிலையம் அடுத்த ஆண்டு பாதியில் நிறைவடையும் போது நிலைமை இன்னும் மேம்படும் என்று அவர் கூறினார்.

இத்திட்டத்திற்கு பாங்க் ராக்யாட் நிறுவனம் 80 விழுக்காடு நிதியுதவி அளிக்கிறது. இன்யா இன்ஜினியரிங் நிறுவனம் இந்தக் கட்டமைப்பை உருவாக்கி 30 ஆண்டுகள் இயக்கிய பிறகு, பினாங்கு நீர் வழங்கல் கழகத்திடம் உரிமையை ஒப்படைக்கும்.

கெடா மாநிலத்தின் சுங்கை மூடா நதியை மட்டுமே பினாங்கு மாநிலம் முழுமையாக நம்பியிருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க, பினாங்கு அரசாங்கம் தண்ணீருக்கான மற்ற புதிய நீர் ஆதாரங்களைத் தேடி வருகிறது. இதன் மூலம், பினாங்கு மாநிலத்தின் பெரும்பகுதி தண்ணீருக்காக ஒரே ஒரு சுத்திகரிப்பு நிலையத்தை மட்டும் சார்ந்திருக்கும் நிலை மாறும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News