Jun 18, 2026
Thisaigal NewsYouTube
நாட்டில்  5 மாதங்களில் 388 பாலியல் தொல்லை வழக்குகள் பதிவு: விழிப்புணர்வு அதிகரிப்பதாக துணை அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

நாட்டில் 5 மாதங்களில் 388 பாலியல் தொல்லை வழக்குகள் பதிவு: விழிப்புணர்வு அதிகரிப்பதாக துணை அமைச்சர் தகவல்

Share:

நாட்டில் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் மொத்தம் 388 பாலியல் தொல்லை வழக்குகள் பதிவாகியுள்ளன என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார்.

போலீஸ் துறையின் புள்ளிவிவரங்களின்படி, இந்த வழக்குகள் 2022-ஆம் ஆண்டில் 477 ஆக இருந்து, கடந்த ஆண்டில் 1,038 ஆக உயர்ந்துள்ளது. இது குற்றங்கள் அதிகரித்ததை மட்டும் காட்டாமல், பாதிக்கப்பட்டவர்கள் மௌனம் கலைந்து புகார் அளிக்கும் விழிப்புணர்வை பெற்றுள்ளதையும் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

பெரும்பாலான சம்பவங்கள் பணியிடங்களிலும், பாதிக்கப்பட்டவருக்கு நெருங்கிய குடும்ப உறவுமுறை உள்ள நபர்களாலும் நிகழ்த்தப்படுகின்றன என்று கூறிய லிம் ஹுய் யிங், தன்மானம் மற்றும் வேலை இழப்பு பயம் காரணமாக பலர் இன்னும் புகார் அளிக்கத் தயங்குவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, பாலியல் தொல்லைக்கு எதிரான நடுவர் மன்றம் இதுவரை 100 புகார்களைப் பெற்று, அதில் 82 வழக்குகளுக்கு 60 நாட்களுக்குள் துரிதமாகத் தீர்வு கண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியான உதவிகளை வழங்க 24 மணி நேரமும் செயல்படும் 'தாலியான் காசிஹ் 15999' என்ற பிரத்யேக உதவி எண் மற்றும் சமூக ஆதரவு மையங்கள் மூலம் அரசாங்கம் ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கி வருகிறது என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

போக்குவரத்து அபராதங்களை உயர்த்துதல் உட்பட  சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் புதிய திருத்தங்கள் பரிந்துரை

போக்குவரத்து அபராதங்களை உயர்த்துதல் உட்பட சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் புதிய திருத்தங்கள் பரிந்துரை

அரசியல் பாதுகாப்புக்காக அரண்மனையை கேடயமாகப் பயன்படுத்தக் கூடாது: ஓன் ஹஃபீஸ் காஸிக்கு மஹ்பூஸ் ஒமர் கண்டனம்!

அரசியல் பாதுகாப்புக்காக அரண்மனையை கேடயமாகப் பயன்படுத்தக் கூடாது: ஓன் ஹஃபீஸ் காஸிக்கு மஹ்பூஸ் ஒமர் கண்டனம்!

பாரந்தூக்கி இயந்திர  பழுதுபார்க்கும் போது நேர்ந்த விபத்து: பட்டறை உரிமையாளர் பலி

பாரந்தூக்கி இயந்திர பழுதுபார்க்கும் போது நேர்ந்த விபத்து: பட்டறை உரிமையாளர் பலி

உலகக்கிண்ணக் காற்பந்து சூதாட்டம்: நாடு தழுவிய அளவில் 58 பேர் கைது

உலகக்கிண்ணக் காற்பந்து சூதாட்டம்: நாடு தழுவிய அளவில் 58 பேர் கைது

எல்லைக் கடந்து சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் சென்றதாக இரு ராணுவ வீரர்கள் மீது குற்றச்சாட்டு

எல்லைக் கடந்து சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் சென்றதாக இரு ராணுவ வீரர்கள் மீது குற்றச்சாட்டு

முஹிதீன் மீதான அவதூறு தீர்ப்பு உறுதி: இழப்பீட்டுத் தொகை குறைப்பு

முஹிதீன் மீதான அவதூறு தீர்ப்பு உறுதி: இழப்பீட்டுத் தொகை குறைப்பு