சிரம்பான், செப்டம்பர்.11-
சிரம்பானில் பெண்ணிடம் தங்க நகைகளைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இரு ஆடவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 25 வயதான முகமட் ரெட்ஸுவான் முகமட் கைருல் அனுவாரும் ஜி. தந்திரனும் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுரிதா புடின் முன்னிலையில் இன்று தாங்கள் குற்றமற்றவர்கள் எனக் கூறினர்.
கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் கோத்தா செரிஎமாஸ் பகுதியில் கத்தி மற்றும் ஆயுதங்களுடன் அவர்கள் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.








