Dec 5, 2025
Thisaigal NewsYouTube
G.M. KLANG கில் சுற்றுலாப் பொருட்களுக்கான கவர்ச்சிகரமான சலுகைகள்
தற்போதைய செய்திகள்

G.M. KLANG கில் சுற்றுலாப் பொருட்களுக்கான கவர்ச்சிகரமான சலுகைகள்

Share:

கிள்ளான் நகரின் சுற்றலா தூதர் என்ற முறையில் முன்னணி மொத்த வியாபார சந்தையான G.M. KLANG, தனது மதிப்புமிகுந்த பங்களிப்பை நிலைநிறுத்தும் முயற்சியாக சிலாங்கூர் சுற்றுலாத்துறையுடன் ஒன்றிணைந்து “FIESTA PUSING SELANGOR DULU” வாயிலாக உள்ளூர் சுற்றுலாத்துறைக்கு மெருகூட்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

“FIESTA PUSING SELANGOR DULU” எனும் இந்நிகழ்வு G.M. KLANG மொத்த வியாபார மையத்தின் கீழ் தளத்தில் Atrium வளாகத்தில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் வார விடுமுறையில் நடைபெறவிருக்கிறது.

“FIESTA PUSING SELANGOR DULU” நிகழ்வானது, “விடுமுறையை கழிக்க விரும்புகிறீர்களா? முதலில் சிலாங்கூரை வலம் வாருங்கள்” என்ற பிரச்சார இயக்கத்துடன் இரண்டரக் கலந்ததாகும்.

இந்த இயக்கம் கடந்த 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் சிலாங்கூரில் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருப்பதுடன் பொது மக்கள் மத்தியிலும் ஆக்கப்பூர்மான வரவேற்பு பெற்றுள்ளது.

G.M. KLANG கின் முத்திரை தொடர்புத்துறை முதிர் நிலை நிர்வாகி Norsuhaida binti Othman, இந்த நிகழ்வு குறித்து விவரிக்கையில் அடுத்த வாரம் பள்ளிவிடுமுறை தொடங்கவிருக்கும் நிலையில் குடும்பத்தின் குதூகல நட்புறவு நிகழ்வாக “FIESTA PUSING SELANGOR DULU” அமைந்து இருப்பது மிக பொருத்தமாகும் என்றார்.

பள்ளி விடுமுறை காலத்தில் சுற்றுலா மேற்கொள்ள திட்டமிட்டுள்ள குடும்பங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை இந்த நிகழ்வு வழங்கும். குறிப்பாக சிலாங்கூர் முழுவதும் எந்தெந்த இடத்தை சுற்றிப்பார்க்கலாம், எங்கே தங்கலாம், எத்தகைய சுற்றலா வாய்ப்புகள் உள்ளன என்பதை கிட்டத்தட்ட 15 சுற்றுலா நிறுவனங்கள் இந்த இரண்டு நாள் நிகழ்வுகளில் சுற்றலாத்துறை செயல்முறை விளக்கத்தின் வாயிலாக பிரபலப்படுத்தவிருக்கின்றன என்று Norsuhaida Binti Othman தெரிவித்துள்ளார்.

கவர்ச்சிகரமான பரிசுகளுடன் அதிர்ஷ்டக்குழுக்களும் காத்திருப்பதால் G.M. KLANG - கிற்கு மக்கள் திரண்டு வரும்படி நோர்சுஹைடா பிந்தி ஓத்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்