Oct 2, 2026
Thisaigal NewsYouTube

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

2022 ஆம் ஆண்டு பாலஸ்தீனியர் ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 8 பேரில் ஒருவரை கண்டுபிடிக்க முடியாததால், அவரைக் கைது செய்ய உயர் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்தது.

31 வயதான இக்மால் அப்துல் ரஹிஸைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நீதிபதி அரீஃப் இம்ரான் அரிஃபின் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் இக்மாலைத் தேடி வருவதாகவும், சிலாங்கூர் பந்திங்கில் உள்ள அவரது சொந்த ஊருக்குச் சென்றும் விசாரித்ததாகவும் துணை அரசு வழக்கறிஞர் ஜைலீன் நதியா சுபீர் தெரிவித்தார்.

இக்மால் கடந்த ஜனவரி முதல் சொந்த ஊருக்குத் திரும்பவில்லை என அவரது தந்தை தெரிவித்ததாகவும், அவரது உடன்பிறப்புகளுக்கும் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இக்மாலுக்கான 50,000 ரிங்கிட் பிணைத்தொகையை அவரது பிணையாளர் திரும்பப் பெற நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
துன் மகாதீருக்கு துக்கத்தில் இருந்து மீள சற்று அவகாசம் தேவை – முக்ரிஸ்

துன் மகாதீருக்கு துக்கத்தில் இருந்து மீள சற்று அவகாசம் தேவை – முக்ரிஸ்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

ஜோகூரில் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 1,346 வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை

ஜோகூரில் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 1,346 வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை