Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மித்ராவின் தோல்விக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் காரணமா? கண்மூடித்தமான குற்றச்சாட்டுகள் வேண்டாம்:  டத்தோ ஶ்ரீ ரமணன் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

மித்ராவின் தோல்விக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் காரணமா? கண்மூடித்தமான குற்றச்சாட்டுகள் வேண்டாம்: டத்தோ ஶ்ரீ ரமணன் எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.07-

இந்தியர்களின் சமூகவியல் உருமாற்றுப் பிரிவான மித்ரா தோல்விக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அரசாங்க ஏஜென்சிகளே காரணம் என்பதைப் போல கண்மூடித்தனமாகக் குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டாம் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் கடுமையாக எச்சரித்தார்.

மித்ராவை வழி நடத்தத் தெரியாவிட்டால், ஆற்றல் வாய்ந்த மற்றவர்களுக்கு வழிவிட வேண்டுமே தவிர கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல் எறிய வேண்டாம் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் வலியுறுத்தினார்.

மித்ராவின் தோல்வியுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரைத் தொடர்புப்படுத்த வேண்டாம் என்றும் எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

யாரைக் குறி வைத்து, டத்தோ ஶ்ரீ ரமணன் இந்த எச்சரிக்கையை விடுத்தார் என்பது குறித்து அவர் யாருடைய பெயரையும் மேற்கோள் காட்டவில்லை என்ற போதிலும் பத்து எம்.பி.யும் மித்ராவின் பணிக் குழுத் தலைவருமான P. பிரபாகரன் நேற்று நாடாளுமன்றத்தில் மித்ரா தோல்விக்கு யார் காரணம் என்பது குறித்து பேசியது தொடர்பில் டத்தோ ஶ்ரீ ரமணன் இந்த எச்சரிக்கையை விடுத்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மித்ராவின் தோல்விக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார், பிரதமர் அலுலகம், அரசாங்க ஊழியர்கள் காரணம் என்று கூறப்படும் கண்மூடித்தனமாகக் குற்றச்சாட்டுகளை அறவே ஏற்க முடியாது என்று டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

இத்தகைய குற்றச்சாட்டுகள் உண்மையிலேயே ஆத்திரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்துகின்றன. தெரிந்தால் பேச வேண்டும். தெரியாவிட்டால் பேசக்கூடாது என்று மித்ரா பணிக் குழுவின் முன்னாள் தலைவரான டத்தோ ஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.

இன்று கோலாலம்பூர் செண்ரலில் எஸ்எம்இ கோர்ப். மலேசியா, டேவான் மாகோத்தாவில், இந்தியர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான நிரல் வணிகத் திட்டத்தில் தேர்வு பெற்றவர்களுக்கு விருப்புரிமை கடிதம் வழங்கும் நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஶ்ரீ ரமணன் மேற்கண்டவாறு கூறினார்.

மித்ராவின் தோல்விக்கு பிரதமரை கைநீட்டுவது அநாகரீகமான செயல் என்று குறிப்பிட்ட டத்தோ ஶ்ரீ ரமணன், பேசும் போதும் அறிக்கை விடும் போதும் கவனமாக இருக்க வேண்டும். இதை ஓர் எச்சரிக்காகவே தாம் விடுக்கும் அதே வேளையில், சம்பந்தப்பட்டர்கள் இத்தகைய ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைவுறுத்தினார்.

Related News