இளைஞர், விளையாட்டு அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து இடங்களிலும் புகைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு விதிகள் 2004இன் படி கடந்த நவம்பர் 3 ஆம் தேதி அமைச்சரவைக்கு பிந்தைய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் அமைச்சர் Hannah Yeoh கூறினார்.
சிகரெட், வேப் உட்பட அனைத்ய் விதமான புகைப் பிடித்தல் நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
அது சார்ந்த பொருட்கள், மின் வங்கி எனப்படும் பவர் பேங்க் கருகளையும் கொண்டு வரக்கூடாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்விவகாரம் குறித்து கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் சொன்னார்.








