Nov 19, 2025
Thisaigal NewsYouTube
ஜெல்லி மீன் கடித்து ரஷ்ய குழந்தை உயிரிழந்தது
தற்போதைய செய்திகள்

ஜெல்லி மீன் கடித்து ரஷ்ய குழந்தை உயிரிழந்தது

Share:

அலோர் ஸ்டார், நவம்பர்.19-

லங்காவியில் சுற்றுலா மேற்கொண்டிருந்த ரஷ்ய தம்பதியரின் உல்லாசப் பயணம் சோகத்தில் முடிந்தது. கடந்த சனிக்கிழமை ஜெல்லி மீன் கடித்து தீவிர சிகிக்சைப் பெற்று வந்த அந்தத் தம்பதியரின் இரண்டு வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

Vladimir Lakubanets என்று அந்த ஆண் குழந்தை இன்று காலை 9.46 மணிக்கு அலோர் ஸ்டார், சுல்தானா பஹியா மருத்துவமனையில் உயிரிழந்தாகத் தெரிவிக்கப்பட்டது.

ரஷ்யா, Khabarovsk நகரைச் சேர்ந்த குழந்தையின் தந்தை Nikita Lakubanets கூறுகையில், தானும் தனது மனைவியும் தங்கள் மகனை லங்காவி Chennang சதுக்கத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் காலை 7.30 மணியளவில் நடைப் பயணத்திற்கு அழைத்துச் சென்ற போது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறினார்.

கடற்கரையில் குழந்தைக்கு விளையாட்டு காட்டிக் கொண்டு இருந்த போது, திடீரென்று அலறி அழுதது. தனது மனைவி குழந்தையைச் சோதனை செய்த போது குழந்தையின் கால்களில் ஜெல்லி மீன் கடித்திருப்பது தெரிய வந்தது. பின்னர் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றதாக 32 வயது Nikita Lakubanets தெரிவித்தார்.

Related News