Oct 2, 2026
Thisaigal NewsYouTube

விடுதிக் குளத்தில் மூழ்கிய 4 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விடுதிக் குளத்தில் மூழ்கிய 4 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

சிரம்பான், டிசம்பர்.07-

நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சன் கடற்கரை, பத்து 4 இல் உள்ள ஒரு விடுதியின் நீச்சல் குளத்தில் மூழ்கிய நான்கு வயதுச் சிறுவன் நேற்று இரவு 8.40 மணிக்கு உயிரிழந்ததாக அதிகாரப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1.5 மீட்டர் ஆழமும் 9 மீட்டர் நீளமும் கொண்ட இந்தக் குளத்தில் சிறுவன் மூழ்கிய தகவல் சிரம்பான் மருத்துவமனையிலிருந்து கிடைக்கப் பெற்றது என்று போர்ட்டிக்சன் மாவட்ட காவற்படைத் தலைவர் மஸ்லான் உடின் தெரிவித்தார்.

முதற்கட்டச் சிகிச்சைகளுக்காக போர்ட்டிக்சன் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட அச்சிறுவன், பின்னர் மேல் சிகிச்சைக்காக சிரம்பானில் உள்ள துவாங்கு ஜாஃபார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். இந்தச் சம்பவம் குறித்துச் சரியாகத் தெரிந்து கொள்ள, இன்று ரெம்பாவ் மருத்துவமனையில் சிறுவனின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட உள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
விடுதிக் குளத்தில் மூழ்கிய 4 வயதுச் சிறுவன் உயிரிழப்பு! | Thisaigal News