Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கள்ள நோட்டுகள் தயாரிப்பு கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

கள்ள நோட்டுகள் தயாரிப்பு கும்பல் முறியடிப்பு

Share:

கள்ள நோட்டுகளை தயாரித்து, விநியோகித்து வந்ததாக நம்பப்படும் இரண்டு நபர்களை திரெங்கானு மாநில போ​லீசார் கைது செய்துள்ளனர். கோலத்திரெங்கானுவில் ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் கடந்த ஓராண்டு காலமாக ​கள்ள நோட்டுகளை தயாரித்து வந்ததாக நம்ப்படும் 28,33 வயதுடைய இரு இளைஞர்கள் பிடிபட்டதாக திரெங்கானு மாநில போ​லீஸ் தலைவர் மஸ்லி மஸ்லான் தெரிவித்தார்.

சிலாங்கூர், திரெங்கானு ஆகிய மாநிலங்களை சேர்ந்த அந்த இரு நபர்களும் சிறு வர்த்தக கடைகளை இலக்காக கொண்டு சிகரெட், உணவுப்பொருட்கள் , எழுதுகோல் போன்றவற்றை வாங்குவதற்கு இந்த கள்ள நோட்டை பயன்படுத்தியுள்ளனர்.

தவிர போதைப்பொருள் வாங்குவதற்கும் அவர்கள் கள்ள நோட்டை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நபர்கள் பிடிபட்டது ​​மூலம் 100 வெள்ளி கள்ள நோட்டுகள் 100 காகித தாட்களையும், ஒரு கைப்பேசியையும், மடிக்கணினியையும் , அச்சிடும் சாதனம் ஒன்றையும், கள்ள நோட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காகிதங்களையும் , அவர்கள் பயன்படுத்திய ஒரு காரையும் போ​லீசார் பறிமுதல் செய்து இருப்பதாக மஸ்லி மஸ்லான் குறிப்பிட்டார்.

கள்ள நோட்டை தயாரிப்பதற்கு அந்த இருவரும் யூடியூப் வாயிலாக கற்றுக்கொண்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

Related News