Sep 23, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் இந்த ஆண்டு சுமார் 15,000 பேர் வேலை இழப்பு; புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு தீவிர நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் இந்த ஆண்டு சுமார் 15,000 பேர் வேலை இழப்பு; புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு தீவிர நடவடிக்கை

Share:

சிலாங்கூர் மாநிலத்தில் இந்த ஆண்டு ஜூலை 10ஆம் தேதி வரை மொத்தம் 14 ஆயிரத்து 768 தொழிலாளர்கள் தங்களின் வேலைகளை இழந்துள்ளதாக பெர்கேசோ (PERKESO) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் 4,263 பேர் பல்வேறு வேலை வாய்ப்புத் திட்டங்கள் மூலம் புதிய வேலைகளைப் பெற்றுள்ளனர் என்று சிலாங்கூர் மாநில மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புக்குழுத் தலைவர் வி. பாப்பாராயுடு மாநிலச் சட்டமன்றத்தில் இன்று தெரிவித்தார். வேலை இழந்த மற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பை உறுதி செய்யப் பெர்கேசோவுடன் இணைந்து மாநில அரசு தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்று பாப்பாராய்டு விளக்கினார்.

இதற்காகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் 'ஜோப்கேர் சிலாங்கூர்' (JobCare Selangor) போன்ற பிரத்யேக வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுவதோடு, தகுதியுடையவர்களுக்கு வேலை தேடும் காலத்திற்கான உதவித் தொகைகளும் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News