இஹைலிங் மற்றும் டாக்சி வாகனங்களின் ஆயுட்கால 10 ஆண்டிலிருந்து 15 ஆண்டாக நீட்டிக்கப்படுவதாக, தரை பொது போக்குவரத்து அமலாக்க நிறுவனமான (எ.பி.எ.டி) அறிவித்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து டாக்சி மற்றும் இஹைலிங் வாகனகங்களுக்கும் இந்த ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வாகனத்தின் பாதுகாப்பு, பயணிகளின் சௌகரியம் மற்றும் போக்குவரத்து தொழில் துறையின் தோற்றம் ஆகியவை உறுதிசெய்வதற்கு தவணை முறையில் மேற்கொள்ளப்படும் புஸ்பாக்கோம் விதிமுறைகளையும் இதர சோதனைகளையும் அனைத்து வாகனங்களும் பின்பற்ற வேண்டும் என அவ்வமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டின் பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்தவும், அவற்றின் ஓட்டுநர்களின் தரத்தை உயர்த்துவதற்கும் இது போன்ற வாகனங்களின் ஆயுட்கால நீட்டிப்பு மிக அவசியம் என்பதனை அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related News

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்


