மதுபானம் வாங்குவதற்கு, தாம் பாதுகாவலராக பணியாற்றி வந்த நீதிமன்றக் கட்டடத்தின் ஓர் அறையில் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து பணத்தைக் களவாடியதாக நம்பப்படும் பாதுகாவலர் ஒருவரை விசாரணைக்காக போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.
மலாக்கா, அயேர் கெரோ வில் உள்ள மலாக்கா நீதிமன்ற கட்டட வளாகத்தில் 25 வயதுடைய அந்த பாதுகாவலர் இக்குற்றத்தைப் புரிந்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பாதுகாவலர், இன்று அதே நீதிமன்றக் கட்டடத்தில் மாஜிஸ்திரேட் மசானா சினின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக அவரை 6 நாள் தடுத்துவைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


