Jan 19, 2026
Thisaigal NewsYouTube
எம்.ஆர்.டி. சேவை, துன் மகாதீர் பாராட்டு
தற்போதைய செய்திகள்

எம்.ஆர்.டி. சேவை, துன் மகாதீர் பாராட்டு

Share:

புதியதாக சேவையைத் தொடங்கியுள்ள எம்.ஆர்.டி. ரயில் சேவை பலதரப்பட்ட வசதிகளை உள்ளடக்கி இருப்பது குறித்து, அந்த ரயில் சேவையை நிர்வகித்து வரும் பிரசாரனா நிறுவனத்தை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது வெகுவாக பாராட்டினார்.
எம்.ஆர்.டி. ரயிலில் பயணம் செய்வது வெளிநாட்டில் இருப்பது போன்ற ஓர் உணர்வு மேலிட்டதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
தமது துணைவியார் துன் சிதி ஹஸ்மாவுடன் நேற்று எம்.ஆர்.டி. ரயிலில் பயணித்த துன் மகாதீர், இந்தப் பெருந்திட்டம் அதிக செலவுக்குரியது என்றாலும், ஏற்படுத்தப்பட்ட வசதிகளும், சௌகரியங்களும் வளர்ச்சி அடைந்த நாட்டிற்கு நிகராக இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

Related News