May 22, 2026
Thisaigal NewsYouTube
கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக நபர் ஒருவர் கைது
தற்போதைய செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக நபர் ஒருவர் கைது

Share:

அம்பாங், ஜூன் 21-

சிலாங்கூர், அம்பாங் உகே -யில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் சொத்துடமை முகவர் ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து நேற்று மாலை 5 மணியளவில் சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து புகார் கிடைக்கப் பெற்றதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடியிருந்த வந்த சந்தேகிக்கும் நபர் வெளியே சென்று வீடு திரும்பிய வேளை, நுழைவாயில் கதவின் பூட்டு மாற்றம் செய்திருப்பதை குறித்து சம்பந்தப்பட்ட முகவரிடம் கேட்டறிந்துள்ளார்.

சம்பந்தப்பட்ட முகவரும் நுழைவாயில் கதவின் பூட்டு எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை என்று அறிவித்ததை தொடர்ந்து தன்னை வெளியே நிற்க வைத்து பூட்டிவிட்டதாக சந்தேகிக்கும் அந்நபர் குற்றச்சாட்டியதுடன் அவருக்கு கொலை மிரட்டலையும் விடுத்ததாக முகமது அசாம் கூறினார்.

இதில் 35 வயது சந்தேகிக்கும் அந்நபர் கைது செய்யப்பட்டு நான்கு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தகவலளித்தார்.

Related News