Jun 29, 2026
Thisaigal NewsYouTube
10 ஆண்டுகளில் பதிவான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் சிலாங்கூர் முதலிடம் - நாடாளுமன்றத்தில் தகவல்
தற்போதைய செய்திகள்

10 ஆண்டுகளில் பதிவான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் சிலாங்கூர் முதலிடம் - நாடாளுமன்றத்தில் தகவல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.24-

மலேசியாவில் கடந்த 10 ஆண்டுகளில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கடந்த 2015 முதல் 2025 ஆம் ஆண்டு வரையில், சிலாங்கூரில் மொத்தம் 1,575 வழக்குகளில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூரை அடுத்து, இரண்டாவது இடத்தில் ஜோகூர் மாநிலமும், அடுத்த நிலையில், சபா மற்றும் கெடா மாநிலமும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜோகூரில் மொத்தம் 806 வழக்குகள், சபாவில் 505 வழக்குகள் மற்றும் கெடாவில் 465 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் சைஃபுடின் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், பெர்லிஸ் மாநிலத்தில் 116 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நாடெங்கிலும் பதிவான 17 ஆயிரத்து 609 சம்பவங்களில் 7 ஆயிரத்து 90 சம்பவங்களில் மட்டுமே, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று தனது எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

Related News

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு