சக நாட்டவர்களை கொலை செய்ததாக புலன் விசாரணைக்கு உதவும் நோக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவர், செந்தூல் மாவட்ட போலீசாரின் மேற்பார்வையின் கீழ் உள்ள ஜின்ஜாங் போலீஸ் தடுப்புக்காவலில் உயிரிழந்தார்.
43 வயதுடைய அந்த இலங்கைப் பிரஜை, நேற்று இரவு 11 மணியளவில் நெஞ்சு வலியினால் அவதியுற்றதைத் தொடர்ந்து போலீசார் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் உதவியை நாடினர்.
ஜின்ஜாங் போலீஸ் தடுப்புக்காவலில் தடுப்புக்காவலில் கிடந்த அந்த நபரை மருத்துவ அதிகாரிகள் பரிசோனை செய்ததில் அவர் இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நேர்மை மற்றும் நன்னெறி பிரிவுத் இயக்குநர் டத்தோ செரி அஸ்ரி அஹ்மாட் தெரிவித்தார்.அந்த இலங்கைப் பிரஜையின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு அந்த நபரின் உடல் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அஸ்ரி அஹ்மாட் குறிப்பிட்டார்.உயிரிழந்த 43 வயதுடைய அந்த இலங்கைப் பிரஜை, கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி கோலாலம்புர் செந்தூல், ஜாலான் பெர்ஹென்தியான், கம்போங் கோவில் ஹீலீரில் நான்கு மாடி கடை கடை வீட்டில் மூன்று இலங்கைப் பிரஜைகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.







