Oct 16, 2026
Thisaigal NewsYouTube

எல்ஆர்டி. தூணில் கார் மோதி, ஓட்டுநர் உயிரிழந்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எல்ஆர்டி. தூணில் கார் மோதி, ஓட்டுநர் உயிரிழந்தார்

பெட்டாலிங்ஜெயா, டிச. 12-


கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி எல்.ஆர்.டி. ரயில் தூணில் மோதி, தீப்பிடித்துக்கொண்டதில் அதன் ஓட்டநர் கருகி மாண்டார்.

இச்சம்பவம் இன்று காலை 6.20 மணியளவில் கூட்டரசு நெடுஞ்சாலையில் பெட்டாலிங் ஜெயாவில் நிகழ்ந்தது. எல்.ஆர்.டி. தூணில் மோதிய அடுத்த கணமே கார் தீப்பிடித்துக்கொண்டதால் காரின் இடிபாடுகளுக்கு மத்தியில் அதன் ஓட்டுநரால் வெளியே வர முடியாமல் காருக்குள்ளேயே சிக்கி மாண்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் சோலேஹுடின் ஸோல்காப்லி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபரின் கருகிய உடல், பெட்டாலிங் ஜெயா மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது தங்கள் வாகனஙகளில் Dash Board கேமராவில் பதிவு செய்தவர்கள் போலீசாருடன் தொடர்பு கொள்ளுமாறு சோலேஹுடின் ஸோல்காப்லி கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →