கடந்த 2018ஆம் ஆண்டில் நஜிப் ரசாக்கை வீழ்த்த ஜசெக-வும் தாமும் ஒன்றிணைந்து ஒருவரை ஒருவர் பயன்படுத்திக் கொண்டதாக துன் மகாதீர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகளுடனான தமது உறவில் "நிலையற்றவர்" என்று மகாதீர் விமர்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.
தமது இலக்கை அடைய, "எதிரியின் எதிரி நண்பன்" என்ற அணுகுமுறையைத் தாம் நம்புவதோடு அதனைக் கையாண்டு வெற்றியும் கண்டதாக மகாதீர் கூறினார்.
தேசிய முன்னணியை வீழ்த்துவதில் பிகேஆர், ஜசெக கட்சிகளுடனான கூட்டணி குறித்து மகாதீரிடம் வினவியபோது, பெரும்பான்மையைப் பெறவே ஜசேக பயன்படுத்ட்யப்பட்டது. இல்லையெனில், நஜிப் தொடர்ந்து பிரதமராகப் பதவியில் நீடித்திருப்பார்.
நஜிப்பை வீழ்த்துவதில் ஜசெகவும் இலக்கு கொண்டிருந்ததும் அக்கட்சி தம்மைப் பயன்படுத்தத் தயாராக இருந்ததையும் தாம் உணர்ந்திருந்ததாக மகாதீர் தெரிவித்தார்.
இரு தரப்பினரின் நோக்கத்தை அடைய வியூகமே முக்கியம். ஆனால் தற்பொது பாஸ் கட்சியுடன் ஒத்துழைப்பதைத் தவிர தமக்கு வேறு வழி இல்லை எனவும் மகாதீர் குறிப்பிட்டார்.
நாட்டிற்காகவும் சமயத்திற்காகவும் போராடிய கட்சி அம்னோ. ஆனால், அக்கட்சியை பணத்திற்காகப் போராடும் கட்சியாக நஜிப்பின் தலைமைத்துவம் மாற்றி விட்டது. அவ்வாறானக் கட்சியின் தம்மால் தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது. மலாய்க்காரர்களை முழுதாய் அரசாங்கத்தை மட்டுமே நம்பி இருக்கும் நிலையில் வைத்திருக்கக் கற்பித்தார் நஜிப்.
தொடக்க காலத்தில் நஜிப் அம்னோவில் இணைந்தபோது தாம் மகிழ்ச்சி கொண்டதாகவும் ஆனால், காலப் போக்கில் நஜிப் தமது தந்தையார் துன் ரசாக் போன்று இல்லை என்பதை மகாதீரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் அவர் கூறினார்.








