Dec 4, 2025
Thisaigal NewsYouTube
போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்துள்ளது
தற்போதைய செய்திகள்

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்துள்ளது

Share:

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 93,534 பேருடன் ஒப்பிடுகையில் 27 சதவீதம் அதிகரித்து 118,920 ஆக உள்ளது.

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்களாக இருப்பது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது என தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு ஏஜென்சியின் தலைமை இயக்குநர் சுடெக்னோ அஹ்மத் பெலோன் கூறினார்.

“கடந்த ஆண்டு 137,000 க்கும் மேற்பட்ட போதைக்கு அடிமையானவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்த போதை பித்தர்கள் 65 சதவீதம் இளைஞர்கள் மற்றும் இளம் வயதினரை உள்ளடக்கியது” என்று அவர் நேற்று இரவு தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு ஏஜென்சியின் ஊடக பாராட்டு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

Related News