கோலாலம்பூர், அக்டோபர்.15-
நேற்று பண்டார் உத்தாமா பள்ளியில் நடந்த மாணவி கொலைச் சம்பவமும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் பிரச்சனையும் அமைச்சரவையில் இன்று விவாதிக்கப்படுகின்றது.
பள்ளிகளில் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் தொடர்பான பிரச்சனைகள், குறிப்பாக மாணவர்களின் ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், அதற்கு பல்வேறு எதிர்வினைகள் எழுந்தாலும் கூட, இதன் அடிப்படைக் காரணம் சமூக ஊடகப் பயன்பாடு தான் என்றும் பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், அரசு இந்த பிரச்சனையை முழுமையான கோணத்தில் அணுகி, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் சமூக ஊடகப் பயன்பாட்டில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.








