Feb 6, 2026
Thisaigal NewsYouTube
வீட்டுப் பணிப்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: தண்டனையை மறுஆய்வு செய்யக் கோரிய பால் யோங்கின் மனு தள்ளுபடி
தற்போதைய செய்திகள்

வீட்டுப் பணிப்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: தண்டனையை மறுஆய்வு செய்யக் கோரிய பால் யோங்கின் மனு தள்ளுபடி

Share:

புத்ராஜெயா, பிப்ரவரி.06-

தனது வீட்டுப் பணிப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக விதிக்கப்பட்ட தண்டனையை மறுஆய்வு செய்யக் கோரி, பேராக் மாநில துரோனோ முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினருமான பால் யோங் தாக்கல் செய்த மனுவை கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

மலாயா தலைமை நீதிபதி ஹாஷிம் ஹம்ஸா தலைமையிலான மூன்று நீதிபதிகள் குழுவினர், பால் யோங்கின் மனு 1995-ஆம் ஆண்டு கூட்டரசு நீதிமன்ற விதிகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று கூறி அதனை நிராகரித்தது.

நீதிமன்றம் தனக்கு வாதாட போதுமான வாய்ப்பளிக்கவில்லை என்றும், இதன் மூலம் இயற்கை நீதி மீறப்பட்டுள்ளதாகவும் பால் யோங் தரப்பில் வாதிடப்பட்டது.

இருப்பினும், அனைத்து தரப்பினருக்கும் தங்கள் வாதங்களை முன்வைக்க முழு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் இயற்கை நீதி மீறல் எதுவும் நடக்கவில்லை என்றும் நீதிபதி ஹாஷிம் ஹம்ஸா தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பால் யோங்கின் இறுதி மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தற்போது எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் இரண்டு பிரம்படி தண்டனையை அனுபவித்து வருகிறார்.

Related News