Oct 17, 2026
Thisaigal NewsYouTube

நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்

கோலாலம்பூர், நவ. 14-


டிரெய்லர் லோரியிலிருந்து பிடிமானத்தை தகர்த்துக்கொண்டு, கொள்கலன் ஒன்று, வாகனங்கள் மீது விழுந்த சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து அந்த டிரெய்லர் லோரியின் போக்குவரத்து உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கோடி காட்டியுள்ளார்.

டிரெய்லர் லோரியிலிருந்து கொள்கலன் சாலையில் விழும் அளவிற்கு அலட்சிப் போக்கும், கவனக்குறைவும் நிகழ்ந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவருமானால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் போக்குவரத்து உரிமம் மீட்டுக்கொள்ளப்படும் சாத்தியம் இருப்பதாக அமைச்சர் விளக்கினார்.

பினாங்கு, புக்கிட் மெர்தாஜம், ஜாலான் புக்கிட் தெங்காவில் நேற்று காலை 9.16 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 21 வயது பெண் உயிரிழந்தார். 25 வயதுடைய மேலும் ஒரு நபர் கடும் காயங்களுக்கு ஆளாகி புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் 3 கார்கள், இரண்டு லோரிகள் சேதமுற்றன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →