May 7, 2026
Thisaigal NewsYouTube
ஊடக புத்தாக்க நிதிக்கு  20.14 மில்லியன் ரிங்கிட் அங்கிகரிப்பு, 5-ஆம் கட்ட விண்ணப்பம் மே 14 வரை – தியோ
தற்போதைய செய்திகள்

ஊடக புத்தாக்க நிதிக்கு 20.14 மில்லியன் ரிங்கிட் அங்கிகரிப்பு, 5-ஆம் கட்ட விண்ணப்பம் மே 14 வரை – தியோ

Share:

உள்ளூர் ஊடக நிறுவனங்கள் 30 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான தொடர்பு அமைச்சின் ஊடக புத்தாக்க நிதிக்கான ஐந்தாம் கட்ட விண்ணப்பங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றன.

ஐந்தாம் கட்ட விண்ணப்பங்கள் மே 1 தொடங்கி 14 ஆம் தேதி வரை திறந்திருக்கும் நிலையில், ஒவ்வொரு ஊடக நிறுவனமும் அதிகபட்சமாக மூன்று லட்சம் ரிங்கிட் வரை விண்ணப்பிக்கலாம் என தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

இதுவரை மொத்தம் 20.14 மில்லியன் ரிங்கிட் அங்கிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 60 ஊடக நிறுவனங்கள் அதில் பயனடைந்திருப்பதை துணையமைச்சர் சுட்டிக்காட்டினார். மீதமுள்ள 9.86 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு அடுத்த கட்டங்களில் பயன்படுத்தப்படும் என்றார்.

ஊடகத் துறையில் பயிற்சி, தொழில்நுட்ப பயன்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, உள்ளடக்க உருவாக்கம் மற்றும் ஆராய்ச்சி, மேம்பாட்டு நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டதாக கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ குறிப்பிட்டார்.

முதல் கட்டத்தில் 34 ஊடக நிறுவனங்கள் 12.38 மில்லியன் ரிங்கிட் அங்கிகரிப்பைப் பெற்றள்ளன. இன்று மே 7 ஆம் தேதி இரண்டாம் கட்டத்தில் 16 ஊடக நிறுவனங்கள் 5.16 மில்லியன் ரிங்கிட் , மூன்றாம் கட்டத்தில் 10 நிறுவனங்களுக்கு 2.6 மில்லியன் ரிங்கிட் அங்கிகரிக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டன.” என்றார்.

மேலும், ஏப்ரல் 14 ஆம் தேதி நிறைவடைந்த நான்காம் கட்டத்தில் பெறப்பட்ட 10 விண்ணப்பங்களில், ஏழு விண்ணப்பங்கள் தகுதி பெற்று தற்போது மதிப்பீட்டில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

“மலேசிய தகவல் துறையில் பதிவு செய்துள்ள ஊடக நிறுவனங்கள் தங்களது திறன்களை வலுப்படுத்தவும், போட்டித்திறனை உயர்த்தவும், வேகமாக மாறிவரும் ஊடக சூழலில் புதிய அணுகுமுறைகளை ஆராயவும் இந்த நிதிக்கு விரைவாக விண்ணப்பிக்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டர்.

முன்னதாக, தலைநகரில் நடைபெற்ற தேசிய பத்திரிகையாளர் தின ஹவானா ஊடக மன்ற தொடக்க விழாவில் கலந்து சிறப்பித்து, உரையாற்றுகையில் தியோ இவ்வாறு கூறினார்.

“நேர்மையான ஊடகம் – நம்பகத்தன்மையின் அடித்தளம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related News

அடகுக்கடையில் கொள்ளை முயற்சி: அரிவாளுடன் புகுந்த மூவருக்குப் போலீஸ் வலைவீச்சு

அடகுக்கடையில் கொள்ளை முயற்சி: அரிவாளுடன் புகுந்த மூவருக்குப் போலீஸ் வலைவீச்சு

எஸ்பிஎம் மாணவர்களுக்கான உயர்கல்வி முடிவுகள் மே 22-இல் வெளியீடு

எஸ்பிஎம் மாணவர்களுக்கான உயர்கல்வி முடிவுகள் மே 22-இல் வெளியீடு

திடீர் வெள்ளம், பாதிப்புகளைக் குறைக்க மாநகர மன்றம் தீவிரத் திட்டம்

திடீர் வெள்ளம், பாதிப்புகளைக் குறைக்க மாநகர மன்றம் தீவிரத் திட்டம்

மீண்டும் கட்சியில் இணைந்த அம்னோ தலைவர்களின் வெற்றி வாய்ப்பே முக்கியம் – ஜாஹிட் ஹாமிடி

மீண்டும் கட்சியில் இணைந்த அம்னோ தலைவர்களின் வெற்றி வாய்ப்பே முக்கியம் – ஜாஹிட் ஹாமிடி

முதியவரை வெட்டிக்கொன்று விட்டு கொள்ளையடித்ததாக நான்கு இந்திய இளைஞர்கள் மீது கொலை குற்றச்சாட்டு

முதியவரை வெட்டிக்கொன்று விட்டு கொள்ளையடித்ததாக நான்கு இந்திய இளைஞர்கள் மீது கொலை குற்றச்சாட்டு

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நிலக்குழி விபத்து: விஜயலட்சுமியின் குடும்பத்தினர் 8 லட்சத்து 24 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நிலக்குழி விபத்து: விஜயலட்சுமியின் குடும்பத்தினர் 8 லட்சத்து 24 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர்