Sep 26, 2026
Thisaigal NewsYouTube
அடகுக்கடையில் கொள்ளை முயற்சி: அரிவாளுடன் புகுந்த மூவருக்குப் போலீஸ் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

அடகுக்கடையில் கொள்ளை முயற்சி: அரிவாளுடன் புகுந்த மூவருக்குப் போலீஸ் வலைவீச்சு

Share:

அடகுக்கடை ஒன்றிற்குள் புகுந்த மூன்று மர்ம நபர்கள், ஊழியர்களை அரிவாளைக் காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்றதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை சிலாங்கூர், புச்சோங் பிரிமாவில் உள்ள ஒரு அடகுக்கடையில் நடந்துளது.

கறுப்பு நிற உடை அணிந்து வந்த அந்த நபர்கள் அடகுக்கடையின் பாதுகாப்பு பெட்டகப் பகுதிக்குள் நுழைய முயன்றபோது, அபாய மணி ஒலித்ததால் எதையும் திருடாமல் தப்பி ஓடினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வரும் வேளையில், தப்பி ஓடிய மூவரையும் தேடி வரும் சுபாங் ஜெயா போலீசார், தகவல் தெரிந்தவர்கள் 03-78627222 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related News