May 22, 2026
Thisaigal NewsYouTube
MOVE ஏற்பாட்டில் 50 மாணவர்களுக்கு புகைப்பட பயிற்சி பட்டறை
தற்போதைய செய்திகள்

MOVE ஏற்பாட்டில் 50 மாணவர்களுக்கு புகைப்பட பயிற்சி பட்டறை

Share:

கற்றல், கற்பித்தல் துறையில் மட்டுமின்றி மாணவர்களுக்கு புகைப்பட துறைகளிலும் ஒரு சிறந்த எதிர்காலம் இருப்பதை உணர்த்திட Move எனப்படும் மலேசிய மதிப்பு மற்றும் சமத்துவ கழகத்தின் ஏற்பாட்டில் "Make The Clicks Means" எனும் புகைப்பட பயிற்சி பட்டறையின் நிறைவு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

இன்று, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் 12 மணி வரையில் செரி கெம்பாங்கான், தாமான் இகூயுன், பிக்கோலோ சேஃபே வில் மிகச்சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு பிரமுகராக இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார உருமாற்று பிரிவான மித்ராவின், சமூக நலப் பிரிவின் இயக்குநரான புவான் ஐவின் மெர்சி ஜெயபாலன் வருகை புரிந்திருந்தார்.

இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ராவின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பி40, எம்40 குழுவை சேர்ந்த மொத்தம் 50 இந்திய மாணவர்களுக்கு 4 நாள் பட்டறையாக இந்த புகைப்பட பயிற்சி திட்டம் வந்தமைந்த‌து.

நாட்டில் சிறுபான்மையினராக இந்தியர்கள் இருந்தபோதிலும் சிறந்த தொழில் முனைவோரை உருவாக்க வழிவகுத்திடுவதுவே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கமாகும்.

இத்திட்டம், புகைப்பட பயிற்சி குறித்த தகவல்களை வழங்குவதற்கு அப்பாற்பட்டு, இந்திய மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தல், புகைப்பட துறையில் சிறந்து விளங்கிட வழி செய்தல், சமூக வலைத்தளங்களில் எவ்வாறு பணம் சம்பாரித்தல் ஆகிய நுணுக்கங்களை கற்று தந்ததாக அமைந்தது என்கிறார் Move கழகத்தின் தலைவர் மகேந்திரன் ராமன்.

இப்பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நன்சான்றிதழ் வழங்கியதுடன் அவர்களின் அடுத்தக்கட்ட நகர்விற்கு தட்டி தோள் கொடுக்கும் வகை‌யி‌ல் மித்ராவின் ஒத்துழைப்புடன் ஒவ்வொரு மாணவர்களுக்கும் DSLR கேமரா, லென்ஸ், ஒளி உட்பட திரிபோட் ஆகியவையும் வழங்கப்பட்டன.

இதைக் கொண்டு அவர்கள் சொந்த வணிகத்தை திறக்கவும் பொருளாதார ரீதியாக திடமாக இருக்கவும் முடியும் என்று மகேந்திரன் மேலும் அறிவித்தார்.

Related News