முன்னரே கணிக்கப்பட்டது போல், மலேசிய பூப்பந்து அணியின் பெண்கள் இரட்டையர்களான எம் தினா - பெர்லி தான் இணையினர் ஜப்பானில் நடக்கும் ஜப்பான் மாஸ்டர்ஸ் அனைத்துலகப் பூப்பந்து போட்டியின் கால் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
உலகத் தர வரிசையில் 13 வது இடத்தில் இந்த இணையினர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விளையாட்டாளர்களை 41 நிமிடங்களில் 21க்கு 17, 21க்கு 16 எனும் புள்ளிகளில் வீழ்த்தினர்.
அறை இறுதிச் சுற்றில் தௌவானைச் சேர்ந்த ஷுவோ யுன்-யு சியென் ஹுய் இணையினரையோ அல்லது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இன்னொரு அணியையோ சந்திக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.








