வீடு தீப்பிடித்துக்கொண்டதில் மாது ஒருவர் கருகி மாண்ட வேளையில், அவரது கணவர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில், Sabah, Kampung Gerowot என்ற கிராமத்தில நிகழ்ந்தது.
உயிரிழந்த மாது 48 வயதுடைய Ninik Yanuwati என்று அடையாளம் கூறப்பட்டது.
அவரின் கருகிய உடல் வீட்டின் வரவேற்பறையில் கண்டெடுக்கப்பட்ட வேளையில் அவரின் 52 வயது கணவர் மற்றும் இரு பிள்ளைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.








