கோல பெராங், ஜூலை.26-
கடந்த வெள்ளிக்கிழமை மலாக்காவில் உள்ள ஒரு எம்ஆர்எஸ்எம் தொடக்கப் பள்ளியில் மாணவன் ஒருவனை மடக்கி, பகடிவதை செய்ததாக உறுதிச் செய்யப்பட்ட 6 மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இதனை மாரா தலைவர் டாக்டர் அஷ்ராஃப் வாஜ்டி இன்று அறிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மாணவனை அந்த 6 மாணவர்களும் பகடிவதை செய்தற்கான ஆதாரங்கள் இருந்த வேளையில் அந்த அறுவரும் குற்றம் இழைத்துள்ளனர் என்று எம்ஆர்எஸ்எம் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தனது விசாரணையில் உறுதிச் செய்துள்ளதாக டாக்டர் அஷ்ராஃப் வாஜ்டி தெரிவித்தார்.








