Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய கலைஞர்களின் திறமையை வெளிக்கொணர SA PA SA பாடல்திறன் போட்டி
தற்போதைய செய்திகள்

மலேசிய கலைஞர்களின் திறமையை வெளிக்கொணர SA PA SA பாடல்திறன் போட்டி

Share:

மலேசிய கலைஞர்களை கெளரவித்து, அவர்களுக்கு ஓர் அங்கீகாரம் வழங்கும் உன்னத நோக்கில் MY FAME ஏற்பாட்டில் SA PA SA இசை என் அடையாளம் எனும் பாடல்திறன் போட்டி மிக விமர்சையாக நடைபெறவிருக்கிறது.

இந்த மாபெரும் நிகழ்ச்சியை குறித்த சிறப்பு அறிவிப்பு கடந்த மே 23 ஆம் தேதி, மாலை 6 மணி முதல் 7 மணி வரையில் கோலாலம்பூர், துன் சம்பதன் பிரிக்ஃபீல்ட்ஸ், ஜேடிஆர் ஹால் - லில் நடந்தேறியது.

இந்நிகழ்விற்கு சிறப்பு பிரமுகராக YB செனட்டர் திரு. சுரேஷ் சிங் உட்பட ராகா புகழ் கவிமாறன், Lock Up Nathan ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நாட்டில் கலைஞர்களுக்கும் மதிப்பளித்து அவர்களின் திறமைக்கு ஓர் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்கிற Lock Up Nathan - னின் சிந்தனையாற்றல் பாராட்டக்குரியது.

கலைஞர்களிடையே மறைந்திருக்கும் தனி ஆற்றலை வெளிக் கொண்டு வரவிருக்கும் SA PA SA பாடல்திறன் போட்டி இணையத்தளத்தில் இடம் பெறவுள்ளது.

இந்த பாடல்திறன் போட்டி மற்ற நிகழ்ச்சிகளை போல் இல்லாமல் சற்று மாறுப்பட்டு, தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கலைஞர்களின் திறமை மிகுந்த ஆற்றல்களை வைரலாக்குவதும் விளம்பரப்படுத்துவதுமே இப்போட்டி‌யின் முக்கிய நோக்கமாகும் என்கிறார் Lock Up Nathan.

18 வயதிற்கு மேற்பட்ட மலேசியர்கள் 1 நிமிடத்திற்குள் அவர்களுக்கு பிடித்த பாடலை பாடி அவர்களின் குரல் திறனை ஒரு காணொளியாக www.myfame.com.my என்கிற இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம்.

போட்டியாளர்கள் காணொளிகளை அனுப்பி வைக்கும் இறுதி நாள் ஜூன் 9 ஆம் தேதி. திறமைமிக்கவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து