Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கார் திருட்டுக்கும்பல் முறியடிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கார் திருட்டுக்கும்பல் முறியடிப்பு

டிச. 7-

அம்பாங் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கார்களை தி ருடுவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் 7 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

27 க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய எழுவர், கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ACP Mohd Azam Ismail தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி அம்பாங், தாமான் டத்தோ அகமட் ரஸாலி அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் இரண்டாவது மாடியில் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த ஏழு நபர்களும் கைது செய்யப்பட்தாக ACP Mohd Azam குறிப்பிட்டார்.

எழுவரிமும் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் கார் திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இக்கும்பலை முறியடித்தது மூலம் களவாடப்பட்ட கார்கள், சாவிக்கொத்துகள் உட்பட பல பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →