கோலாலம்பூர், செப்டம்பர்.01-
நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையில் வேரூன்றிய மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்ட கால உறவு, தற்போது வலுவாகவும், துடிப்பாகவும் மாறியுள்ளது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவு அரை நூற்றாண்டு கடந்து விட்டது. இரு நாடுகளுக்கும் இடையே கட்டிக் காக்கப்படும் உறவுகள் பரஸ்பர நம்பிக்கையின் கலாச்சாரமாக வளர்ந்துள்ளது. அமைதியாக உறுதியாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
நிச்சயமற்ற காலங்களில் கூட, இரு நாடுகளும் இன்னமும் ஒன்றையொன்று நம்புகின்றன என்பது இந்த உறவுக்கு வலிமை சேர்க்கிறது என்று சீனாவில் தியான்ஜினில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய போது பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
"ஆசியாவில் எதிர்காலத்தை உருவாக்குதல்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விரிவுரையில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட 500 பேர் கலந்து கொண்டனர்.








