இவ்வாண்டு சனவரி மாதம் முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரைடில், 118 பாலியல் தொழில் சார்ந்த இணையப் பக்கங்களை தொடர்பு, பல்லூடக ஆணையம் முடக்கியுள்ளது.
அரச மலேசியக் காசல் படையின் கோரிக்கைக்கு இணங்க அவை முடக்கப்பட்டுள்ளன என தொடர்பு, மின்னிலக்க துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
நேரடியாகவோ அல்லது இணையம் வழியோ பாலியல் தொழில் சர்ந்த எந்த நடவடிக்கையானாலும், அதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் காவல் துறையைச் சார்ந்தது.
மேலும், சமூக ஊடகங்கள் சார்ந்த நடவடிக்கை என்பது, ஒரு தளத்தை மட்டும் உட்படுத்தியது அல்ல, மாறாக, எல்லா சமூக வலைத்தளத்தை உட்படுத்தியது ஆகும், அதன் அடிப்படையில், பாலியல் தொழில் சார்ந்த 76 பதிவுகளை சமூக ஊடகங்களில் இருந்தும் ஆணையம் நீக்கியுள்ளது என துணை அமைச்சர் மேலும் சொன்னார்.
காவல் துறை, இணையச் சேவை வழங்குநர்,சமூக ஊடக வலைத்தளச் சேவை வழங்குநர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் ஆணையத்தும் இந்த முடக்க நடவடிக்கை தொடரும் எனவும் அவர் கூறினார்.








