கிள்ளான், அக்டோபர்.15-
வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க மறுத்த காதலி மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு, கொலை செய்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு கிள்ளான் உயர் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சிலாங்கூர், சபாக் பெர்ணாமில் நிகழ்ந்த இந்த கோரச் சம்பவம் தொடர்பில், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், பின்னர் உயர் நீதிமன்றத்திலும், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்ட 22 வயது முகமட் ஃபக்ருல் அய்மான் என்ற இளைஞருக்குத் தூக்குத் தண்டனை விதிப்பதாக நீதிபதி நோராஸ்லின் ஒத்மான் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி சபாக் பெர்ணாம், ஜாலான் சுங்கை லீமாவில் தனது காதலியான 21 வயது நூர் அனிசா அப்துல் வாஹாப் என்பவரைக் கொன்றதாக அந்த இளைஞர் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.
இந்த இளம் பெண்ணின் கருகிய சடலம், சாலையோரத்தில் ஒரு புதரில் வழிப் போக்கரால் கண்டுபிடிக்கப்பட்டது.








