கோத்தா பாரு, ஆகஸ்ட்.17-
தானா மேரா, பாத்தாங் மெர்பாவில் உள்ள ஒரு மர ஆலையில் பொது நடவடிக்கைப் படை PGAவால் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 1.37 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சட்டத்திற்குப் புறம்பான மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சோதனையின் போது, 800 மரக்கட்டைகள், 30 ஆயிரம் பதப்படுத்தப்பட்ட மரக்கட்டைகள், மரங்களை வெட்டும் கருவிகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன என கமாண்டர் தெங்காரா பிஜிஏ நிக் ரோஸ் அஸான் நிக் அப்துல் ஹாமிட் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த மரக்கட்டைகளுக்கு வனத்துறையின் வரி முத்திரை இல்லாததால், அவை கிளந்தான் மாநிலப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் இருந்து சட்டத்திற்குப் புறம்பாக வெட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் தொடர்பில், சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றவாசிகள் எனக் கருதப்படும் ஒரு சீன நாட்டவரும் இரண்டு மியான்மார் நாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.








