Jun 9, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

Share:

புத்ராஜெயா, மே.27-

வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் புழக்கத்திற்கு வரவிருந்த மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம், மற்றொரு தேதி அறிவிக்கப்படும் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மலேசிய குடிநுழைவுத்துறை அறிவித்துள்ளது.

பொதுமக்களுக்கான சேவை தடையின்றி கிடைப்பதையும், கடப்பிதழ் வழங்கும் செயல்முறையை மேலும் சீரமைப்பதையும் உறுதிச் செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

பொதுமக்கள் தங்களின் கடப்பிதழ்களை வழக்கம் போல் புதுப்பித்துக் கொள்ளலாம். தற்போது பயன்பாட்டில் உள்ள கடப்பிதழ்கள், அவற்றின் காலாவதி தேதி வரை செல்லுபடியாகும்.

புதிய கடப்பிதழ் அமலாக்கம் தொடங்கும் புதிய தேதி மற்றும் கூடுதல் விவரங்கள் குடிநுழைவுத்துறையால் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று ஸாகாரியா குறிப்பிட்டார்.

Related News

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு:  டத்தோ அ. சிவநேசன் சாடல்

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு: டத்தோ அ. சிவநேசன் சாடல்

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

வர்த்தகர் ஆல்பர்ட் தே  மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

வர்த்தகர் ஆல்பர்ட் தே மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்