கோலாலம்பூர், பிப்ரவரி.13-
அரசாங்கம் இயற்றி வரும், சைபர் குற்றச் சட்ட மசோதாவானது, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான டேட்டிங் செயலிகள் விளம்பரப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தும் என துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான டேட்டிங் செயலிகளின் இருப்பு மற்றும் அதன் பரவலானது, நவீன சைபர் குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.
மேலும், இந்த சைபர் குற்ற மசோதாவின் வரைவானது, உயர் தொழில்நுட்ப சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.
இதில் ஓரினச்சேர்க்கையாளர்களின் டேட்டிங் பயன்பாடுகளுடன் தொடர்புடைய குற்றங்களும் அடங்கும்.
இந்த மசோதாவில் ஓரினச்சேர்க்கையாளர்களின் டேட்டிங் செயலிகளைக் கையாளும் குறிப்பிட்ட ஏற்பாடுகள் எதுவும் இல்லை என்றாலும் கூட, டிஜிட்டல் அமைப்பின் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான அடிப்படையை உருவாக்கும் என்று ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.








