Jul 31, 2026
Thisaigal NewsYouTube
முதியவருக்கு பத்து ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

முதியவருக்கு பத்து ஆண்டு சிறை

Share:

எட்டு வயது சிறுமிக்கு வாயில் முத்தம் கொடுத்த குற்றத்திற்காக 67 வயது முதியவர் ஒருவருக்கு கிள்ளான், செஷன்ஸ் நீதிமன்றம் இன்று பத்து ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

ஒரு மூத்தக்குடிமகனான அந்த முதியவர், தாம் செய்த குற்றத்திற்கு நியாயமான சந்தேகத்தை எழுப்புவதில் எதிர்தரப்பு தவறியதைத் தொடர்ந்து அந்நபருக்கு பத்து ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி ஷஃபீரா சாயிட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட முதியல் இன்று டிசம்பர் 27 ஆம் தேதி முதல் தனது சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஷஃபீரா சாயிட், தனது பத்து ஆண்டு சிறைத் தண்டனைக் காலம் முடிவடைந்தப் பின்னர் அந்த முதியவர் இரண்டு ஆண்டுகள் பாரோல் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட வேண்டும் தீர்ப்பு அளித்தார்.

எனினும் இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவிருப்பதாக அந்த முதியவரின் வழக்கறிஞர் எம். தனக்குமார் தெரிவித்ததைத் தொடர்ந்து அத்தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்த முதியவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆ ம் தேதி மாலை 5.40 மணியளவில் கிள்ளான், ஜாலான் மேருவில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு