Jul 31, 2026
Thisaigal NewsYouTube
தாப்பா சிறைச்சாலைக்குள் டிரோன் மூலம் போதைப்பொருள்
தற்போதைய செய்திகள்

தாப்பா சிறைச்சாலைக்குள் டிரோன் மூலம் போதைப்பொருள்

Share:

ஈப்போ , ஆகஸ்ட் 13-

தபா சிறைச்சாலைக்குள் ட்ரோன் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து சிறைச்சாலை அதிகாரிகளை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இவ்விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் விசாரணைக்கு உதவும் வகையில் அந்த சிறைச்சாலைகளின் முக்கிய அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட மேலும் பலர் வாக்குமூலம் அளிப்தற்கு அழைக்கப்படுவர் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மாட் இசா தெரிவித்தார்.

இதுவரையில் ஐந்து அதிகாரிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. . சிறைச்சாலையின் நுழைவாயிலுக்கு பொறுப்பேற்றுள்ள அதிகாரி, CCTV கேமராக்களை கண்காணித்து வரும் அதிகாரி மற்றும் சிறைச்சாலைக்குள் ட்ரோன் இருப்பதை கண்டு பிடித்த அதிகாரி ஆகியோர் விசாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தாப்பா சிறைச்சாலையில் ட்ரோன் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்டது இது முதலாவது சம்பவம் அல்ல. பல முறை நடந்து இருக்கலாம். ஆனால், சிறைச்சாலைக்குள் முதல் முறையாக ட்ரோன் விழுந்து நொறுங்கியிருப்பதால் இச்சம்பவத்தை கண்டு பிடிக்க முடிந்தது என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

இச்சம்பவத்தை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு நேரடியாக விசாரணை செய்து வருவதாக Datuk Azizi விளக்கினார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை