Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அது சீனப் பெண் அல்ல: டத்தோ குமார் விளக்கம்
தற்போதைய செய்திகள்

அது சீனப் பெண் அல்ல: டத்தோ குமார் விளக்கம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.01-

நாட்டின் 68 ஆவது சுதந்திரத் தினத்தையொட்டி, பேரா மாநில அளவில் கொண்டாடப்பட்ட சுதந்தின தின விழாவில் மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவை நோக்கி ஓடிச் சென்று அணுகிய பெண், ஒரு சீன மாது என்று கூறப்படும் தகவலை புக்கிட் அமான் சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் மறுத்தார்.

அந்தப் பெண், ஒரு மலாய்க்காரப் பெண் என்று டத்தோ குமார் விளக்கம் அளித்தார்.

நாட்டின் மேன்மைக்குரிய நிகழ்வில் சீன மாது ஒருவர், இந்தக் காரியத்தைப் புரிந்ததாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தி தொடர்பில் டத்தோ குமார் இந்த விளக்கத்தைத் தந்துள்ளார்.

Related News