Oct 18, 2026
Thisaigal NewsYouTube

அந்நிய நாட்டவர்கள் நாட்டிற்குள் நுழையும் முறையில் மாற்றம் தேவை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்நிய நாட்டவர்கள் நாட்டிற்குள் நுழையும் முறையில் மாற்றம் தேவை

கோலாலம்பூர், செப்டம்பர் 26-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குக் காரணமாக அமையும் சுற்றுலா விசா முறையில் அரசாங்கம் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று Matta எனப்படும் மலேசிய சுற்றுலா சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அந்நிய நாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு நவீன முறையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று மாட்டாவின் தலைவர் முஹம்மது காலித் ஹாருன் கேட்டுக்கொண்டார்.

சுற்றுலா விசாவின் வழி நாட்டிற்குள் நுழையும் அந்நிய நாட்டவர்களின் விசா காலாவதியானதும் அதனை நாட்டிலுள்ள ஊடகங்களின் மூலம் தெரியப்படுத்தி, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பரிந்துரை செய்துள்ளார்.

இதன்வழி சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதேவேளையில் இதில் தொடர்புடைய சம்பந்தப்பட்ட சுற்றுலா ஏஜெண்டுகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் ஆலோசனைக்கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →