Mar 23, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு 32 லட்சம் வெள்ளியாகும்
தற்போதைய செய்திகள்

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு 32 லட்சம் வெள்ளியாகும்

Share:

காஜாங்கில் ஒரு பேரங்காடி மையத்தில் உள்ள நகைக்கடையில் நேற்று திங்கட்கிழமை நடந்த கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு 32 லட்சம் வெள்ளியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நகைகளின் மொத்த மதிப்பு குறித்து உறுதி செய்யப்பட்டப் பின்னர் நகைக்கடை உரிமையாளர் இதனை போலீசாரிடம் தெரிவித்துள்ளார் என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் முகமட் நசீர் த்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த கொள்ளை தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை. இதுவரையில் 7 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பாதுகாவலர் உடை, முகமூடி, கையுறை அணிந்த நான்கு கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் இக்கொள்ளையை நிகழ்ந்தியுள்ளனர். அவர்கள் இரண்டு கைத்துப்பாக்கி, ஒரு நீண்ட துப்பாக்கியை வைத்து இருந்தனர். கொள்ளையடிப்பதற்கு முன்பு, ஓர் எச்சரிக்கை வேட்டையும் கிளப்பியுள்ளனர்.

நகைகளை கொள்ளையடித்தப்பின்னர் அந்த பேரங்காடி மையத்தின் கீழ் தளத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்திலிருந்து தப்பித்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொள்ளையர்களுக்கு எதிராக தேடுதல் வேட்டையை போலீசார் தொடங்கியுள்ளதாக முகமட் நசீர் குறிப்பிட்டார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு 32 லட்சம் வெள்ள... | Thisaigal News