அவதூறு வழக்கு தொடர்பில் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர லிம் குவான் எங், முன்னாள் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம்மிற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை இழப்பீடுாக வழங்க வேண்டும் என்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி அஸிஸா நவாவி, இந்த இழப்பீட்டுத் தொகைக்கு அப்பாற்பட்ட நிலையில் அப்துல் அஸிஸிற்கு, லிம், வழக்கு செலவுத் தொகையாக 70 ஆயிரம் வெள்ளியை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அம்னோவின் உச்ச மன்ற உறுப்பினரான அப்துல் அஜீஸ், அந்த பினாங்கு முன்னாள் முதல்வருக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கை கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பினாங்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யததைத் தொடர்ந்து அத்தீர்ப்பை எதிர்த்து அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
பினாங்கு கடலடி சுரங்கப்பாதைத் திட்டத்தில் மேம்பாட்டாளர் நிறுவனத்திடமிருந்து 30 லட்சம் வெள்ளி ஆலோசனைக் சேவைக்கட்டணம் பெற்றதாக தமக்கு எதிராக லிம் கூறிய குற்றச்சாட்டை எதிர்த்து அப்துல் அஸிஸ், இந்த அவதூறு வழக்கை தொடுத்தார்.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு


