புத்ராஜெயா, டிசம்பர்.05-
தம்மைக் குறை கூறி, விமர்சனம் செய்கின்றவர்களைப் போலீஸ் படை விசாரணை செய்ய வேண்டியதில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராகக் குறை கூறுவதும், விமர்சனம் செய்வதும் குற்றத்தன்மையிலான விஷயம் அல்ல என்று பிரதமர் விளக்கினார்.
மேலும் தமக்கு எதிராக கூறப்படும் விமர்சனமும், குற்றச்சாட்டுகளும் அரசியல் பின்னணியைக் கொண்டு இருப்பதால் சம்பந்தப்பட்டவர்களை விசாரணை செய்ய வேண்டியதில்லை என்று டத்தோ ஶ்ரீ அன்வார், போலீஸ் படையினரைக் கேட்டுக் கொண்டார்.








