Mar 29, 2026
Thisaigal NewsYouTube
ஆசியான் உச்சநிலை மாநாடு சுமூகமாக நடைபெற்றது – டிசிபி ஸ்ரீகுமார் தகவல்
தற்போதைய செய்திகள்

ஆசியான் உச்சநிலை மாநாடு சுமூகமாக நடைபெற்றது – டிசிபி ஸ்ரீகுமார் தகவல்

Share:

கோலாலம்பூர், மே.28-

இம்மாதம் 22 ஆம் தேதி முதல் நேற்று வரை கூட்டரசு தலைநகரில் நடைபெற்ற 46வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அது தொடர்பான கூட்டங்கள் எந்தவித பாதுகாப்பு அசம்பாவிதங்களும் இல்லாமல் சுமூகமாக நடைபெற்றன.

அனைத்துத் தரப்பினரின், குறிப்பாக வெளியுறவு அமைச்சு மற்றும் மாநாட்டு தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்பால் அனைத்து நாட்டுத் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பணியாளர்களுக்கான சுமூகமானப் பாதுகாப்புக் கட்டுப்பாடு உறுதிச் செய்யப்பட்டது என்று புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் துணை இயக்குநர் டி.சி.பி. எம்.வி. ஸ்ரீ குமார் கூறினார்.

வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை மாநாடு நடைபெறும் இடத்திற்குக் கொண்டுச் சென்று மீண்டும் அழைத்து வரும் பணி திட்டமிட்டபடி நடந்தது. உச்சநிலை மாநாடு முழுவதும் அனைத்து தரப்பினர் மீதும் பாதுகாப்புக் கட்டுப்பாடும் சிறப்பாக இருந்தது என்று எம்.வி. ஸ்ரீ குமார் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி