Jan 27, 2026
Thisaigal NewsYouTube
நேர்மறைச் சூழலால் 4.00 நிலைக்குக் கீழ் வலுப்பெற்ற ரிங்கிட்: 2018-க்குப் பிறகு உச்சம்
தற்போதைய செய்திகள்

நேர்மறைச் சூழலால் 4.00 நிலைக்குக் கீழ் வலுப்பெற்ற ரிங்கிட்: 2018-க்குப் பிறகு உச்சம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.27-

அமெரிக்காவின் மத்திய வங்கியான 'பெடரல் ரிசர்வ்' மேற்கொள்ளவிருக்கும் வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகளால், ரிங்கிட்டின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 3 ரிங்கிட் 95 சென் என்ற வலுவான நிலையை எட்டியுள்ளது.

இன்று மாலை 6 மணி நிலவரப்படி, ரிங்கிட்டின் மதிப்பு டாலருக்கு எதிராக 3 ரிங்கிட் 95 சென்னாக உயர்ந்துள்ளது. இது நேற்று இருந்த 3 ரிங்கிட் 96 சென் என்ற நிலையை விடப் பலமானது.

இது கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு ரிங்கிட் எட்டியுள்ள மிக உயர்ந்த மதிப்பாகும். அன்று ரிங்கிட்டின் மதிப்பு 3 ரிங்கிட் 94 சென்னாக இருந்தது பொருளாதார ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

Related News