தங்காக், அக்டோபர்.18-
ஜோகூர், தங்காக், புக்கிட் கம்பீரில் இரண்டு அண்டை வீட்டுக்காரர்கள் கைகலப்பில் ஈடுபட்டது தொடர்பில் போலீசார் புலன் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர் என்று தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ரோஸ்லான் முகமட் தாலிப் தெரிவித்தார்.
இந்த கைகலப்பு தொடர்பாக இரு வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராக்களின் பதிவுகள் பகிரப்பட்ட நிலையில் இந்த தகராறு குறித்து போலீசார் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளனர் என்று ரோஸ்லான் குறிப்பிட்டார்.
இரு குடும்பங்களுக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடே இந்த தகராற்றுக்குக் காரணம் என்று அறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.