Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சபாவிற்கு நுழைய யாரை அனுமதிப்பது : முடிவெடுக்கும் உச்ச அதிகாரத்தை மாநில அரசு கொண்டுள்ளது
தற்போதைய செய்திகள்

சபாவிற்கு நுழைய யாரை அனுமதிப்பது : முடிவெடுக்கும் உச்ச அதிகாரத்தை மாநில அரசு கொண்டுள்ளது

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.23-

சபா மாநிலத்திற்கு நுழைய யாரை அனுமதிக்கலாம், அனுமதிக்கக்கூடாது என்பது குறித்து தீர்க்கமாக முடிவு எடுக்கும் அதிகாரித்தை மாநில அரசு கொண்டுள்ளது என்று முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் இன்று தெளிவுபடுத்தினார்.

பிரபல வர்த்தகர், டத்தோ அல்பெர்ட் தே, சபாவிற்குள் நுழைவதற்கு முதலில் தடை விதிக்கப்பட்டு, பின்னர் அனுமதிக்கப்பட்டது தொடர்பில் அவரின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் விளக்கம் அளிக்கையில் முதலமைச்சர் இதனை இவ்வாறு குறிப்பிட்டார்.

ஒருவரின் வருகை குறித்து பாதுகாப்புத் தரப்பினர் வழங்கக்கூடிய அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, மாநில அரசாங்கம் முடிவெடுப்பதாக அவர் விளக்கினார்.

வர்த்தகர், டத்தோ அல்பெர்ட் தேயின் வழக்கறிஞர் மஹாஜோத் சிங்கின் கூற்றுப்படி, கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தில் மதியம் 12:30 மணியளவில் குடிவரவு அதிகாரிகளால் அல்பெர்ட் தே தடுத்து நிறுத்தப்பட்டார். அல்பெர்ட் தேவிற்கு சபா முதலமைச்சர் அலுவலகம் விதித்துள்ள தடையை குடிநுழைவு அதிகாரிகள் மேற்கோள் காட்டினர்.

அல்பெர்ட் தேவிற்கு கோத்தா கினபாலு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்து கொண்டிருப்பதை நிரூபித்த பின்னரே அவர் சபாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார். குடிவரவு அதிகாரியிடம் ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னர் அவர் இரண்டு நாட்களுக்கு மட்டுமே சபாவில் தங்க அனுமதிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் உண்மையிலேயே மிகவும் கவலையளிக்கக்கூடியதாகும் என்று வழக்கறிஞர் மஹாஜோத் சிங் குறிப்பிட்டார். ஒரு மலேசிய குடிமகனை சபாவிற்குள் நுழைவதைத் தன்னிச்சையாகத் தடுக்க முடியாது. முதலமைச்சர் அலுவலகம் எடுத்துள்ள முடிவை நியாயப்படுத்துவது கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் 5 மற்றும் 9 ஆவது பிரிவுகளை மீறுவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News