Oct 16, 2026
Thisaigal NewsYouTube

தேசிய காப்புறுதி திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தேசிய காப்புறுதி திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்

கோலாலம்பூர், டிச.9-


மருத்துவ காப்புறுதிக் கட்டண பிரமியத் தொகைகள் அதிகரிக்கப்படும் நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய காப்புறுத்திட்டத்தை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும் என்று செனட்டர் ஒருவர் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய காப்புறுதித்திட்டத்தை அமல்படுத்துவதில் எவ்வித அரசியல் அச்சுறுத்தலின்றி அரசாங்கம் துணிந்து முடிவெடுக்க வேண்டும் என்று செனட்டர் டத்தோ டாக்டர் முகமட் ஹத்தா முகமட் ரம்லி கேட்டுக்கொண்டார்.

இது போன்ற சுகாதார கவனிப்புக்கு மக்கள் எளிதாக சிகிச்சையைப்பெறுவதற்கு தேசிய காப்புறுதித்திட்டம் அவசியமாகும்.

கதிர்வீச்சு சிகிச்சை, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இருதய சிகிச்சை போன்றவற்றுக்கு மக்கள் நீண்ட காலமாக காத்திருப்பதை தடுக்கவும், அவர்கள் உடனடியாக மருத்துவ கவனிப்புக்கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்யவும் தேசிய காப்புறுதித்திட்டம் இன்றியமையாதாகும் என்று அந்த மேலவை உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →