Dec 2, 2025
Thisaigal NewsYouTube
வரி ஏய்ப்பு 100 முக்கிய பிரமுகர்களைக் குறிவைத்துள்ளது வருமான வரி வாரியம்
தற்போதைய செய்திகள்

வரி ஏய்ப்பு 100 முக்கிய பிரமுகர்களைக் குறிவைத்துள்ளது வருமான வரி வாரியம்

Share:

வ​ரி ஏய்ப்பு செய்துள்ளதாக நம்பப்படும் வி.ஐ.பி. அந்தஸ்தைக் கொண்ட 100 பிரமுகர்களை இலக்காக கொண்டு வருமான வாரிய சட்டம் பாயவிருக்கிறது. வரி ஏய்ப்பு செய்கின்றவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க இயலாது என்பதை உறுதி செய்யும் வகையில் அவர்களிடமிருந்து வரியை வசூலிப்பதில் 100 முக்கிய பிரமுகர்களை வருமான வரி வாரியம் குறிவைத்துள்ளதாக அதன் தலைவர் டத்தோ முஹம்மட் நிஸோம் சைரி தெரிவித்துள்ளார்.

வரி ஏய்ப்பு செய்யும் பணக்காரர்களுக்கும், பிரமுகர்கர்களுக்கும் எதிராக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக வருமான வரி வாரியத்தின் வலை சுருக்கப்பட்டு வருவதாக முஹம்மட் நிஸோம் குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் மாதம் 6 ஆம் தேதி உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் 27 ஆம் ஆண்டு நிறைவு விழாவைத் தொடக்கி வைத்து உரையாற்றிய பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார், வரி ஏய்ப்பவர்கள் தமது நண்பர்களாக அல்லது ஆதரவாளர்களாக இருந்தாலும் அவர்களை வேட்டையாடுவதற்கான வழிகளை ஆராயும்படி உத்தர விட்டு, ஊக்குவித்து இருப்பதையும் முஹம்மட் நிஸோம் சுட்டிக்காட்டினார்.

கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிதி அமைச்சராக இருந்த போது வரி ஏய்ப்பு செய்கின்ற வி.ஐ.பி. மற்றும் பணக்காரர்களுக்கு எதிராக அவர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் குறித்து அந்த நிறைவு விழாவில் ஆற்றிய உணர்ச்சிகரமான பேச்சு, வருமான வரி அதிகாரிகளுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியதாக முஹம்மட் நிஸோம் நினைவுகூர்ந்தார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்